டயானா பிறந்த நாளில் ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறிய மெர்க்கல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளவரசி டயானாவின் பிறந்த நாளான நேற்று நடைபெற்ற போலோ விளையாட்டுப்போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மீண்டும் தனது ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறியிருந்தார்.

முதன்முறையாக பக்கிங்காம் மாளிகையில் மகாராணியாருடன் தோன்றும்போதே தோள்கள் தெரியும் வகையில் உடை அணிந்து மரபை மீறிய மேகன், பல முறை சர்ச்சைகளுக்குள்ளானார்.

மகாராணிக்கு அருகில் கால்களை சாய்த்து அமர்ந்தது முதல் தனது கணவரின் கையைப் பற்ற முயன்றது வரை ஒவ்வொரு விடயமும் முக்கிய செய்தியானது.

இந்நிலையில் நேற்று போலோ விளையாட்டுப் போட்டி ஒன்றைக் காண தனது கணவருடன் வந்த மேகன் கருப்பு நிறத்தில் இறுக்கமான ஜீன்ஸ் பேண்டும் லூசான வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார்.

சில காலம் ராஜ குடும்ப உறுப்பினராக பொறுப்பாக உடையணிந்த மேகன் மீண்டும் ஹாலிவுட் ஸ்டைலுக்கு மாறிவிட்டார் என பத்திரிகைகள் வர்ணித்தன.

ஜூலை 1 மறைந்த இளவரசி டயானாவின் பிறந்த நாளாகும், நேற்று அவரது 57 ஆவது பிறந்த நாள்.

டயானாவின் பிறந்த நாளில் அவரை போலவே ஸ்டைலாக ஜீன்ஸ் அணிந்த மேகனின் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers