10 நிமிடங்கள் வெயிலில் காத்திருந்த மகாராணி: கிண்டல் செய்த பிரித்தானிய மக்கள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
540Shares
540Shares
lankasrimarket.com

நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரித்தானியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் Windsor Castle வைத்து மகாராணி எலிசபெத் அவர்களை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, மகாராணி அவர்கள் தனக்கு வழங்கிய மரியாதையை முறையாக டிரம்ப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் பிரித்தானிய அரச குடும்ப நெறிமுறையை மீறிவிட்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மகாராணியை சந்திக்க வந்த டொனால்ட் டிரம்ப் 10 நிமிடம் காலதாமதாக வந்துள்ளார். ஆனால், மகாராணியை சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள் மகாராணிக்கு முன்கூட்டியே வந்துவிடுவார்கள்.

டிரம்ப் காலதாமதமாக வந்த காரணத்தால் சுமார் 10 நிமிடங்கள் வெயிலில் காத்திருந்துள்ளார் மகாராணி. மேலும், மகாராணியை சந்திக்க வரும்போது முதலில் அவர்கள்தான் கைகொடுக்க வேண்டும், ஆனால் டிரம்ப் கைகொடுக்காத காரணத்தால், மகாராணியே முன்வந்து கைகொடுத்துள்ளார்.

இவற்றிற்கெல்லாம் அடுத்தபடியாக, Coldstream Guards மூலம் டிரப்புக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பாதுகாவலர்கள் அணிவகுத்து நிற்க தலைவர்கள் நடந்து செல்ல வேண்டும். இதில் பிரித்தானிய மகாராணி முன்னே செல்ல ஏனையவர்கள் அவருக்கு பின்னால் நடந்து செல்ல வேண்டும் இதுதான் நெறிமுறை.

ஆனால், ட்ரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் மகாராணியை முந்திக்கொண்டு நடந்துசென்றார். இடது பக்கமாக வாருங்கள் என மகாராணி செய்கையால் தெரிவித்தும், அது டிரம்புக்கு புரியவில்லை.

சிறிது தூரம் நடந்துசென்ற டிரம்ப் அதன் பின்னர், தன்னை சரிசெய்துகொண்டு, 15 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு, மகாராணி முன்னோக்கி வந்தவுடன் ஒன்றாக சேர்ந்து நடந்து வந்துள்ளார்.

இதுபோன்ற மரியாதை செலுத்தும் நிகழ்வில் மகாராணி நடந்துசெல்கையில் அவரது கணவர் பிலிப் ஒரு அடி பின்னே தான் நடந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்த நடைமுறையை பிரித்தானிய மக்கள் கிண்டல் செய்துள்ளனர். ஒரு நாட்டிற்கு வருகையில் நெறிமுறை என்ன என்பதை கற்றுக்கொண்டு வாருங்கள்.... இந்த டிரம்புக்கு நெறிமுறை என்பது குறித்து தெரியாது போல என கிண்டல் செய்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்