பல பெண்களின் காதல் வலையில் பிரித்தானிய மகாராணியின் கணவர்: மறைக்கப்பட்ட ரகசியம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் தனது 25 வயதில் அரியணை ஏறினார்.

பிரித்தானிய அரசராக இருந்த George VI -இன் மூத்த மகளாக பிறந்த மகாராணி, தமது இளம் வயதில் அரியணை பொறுப்பை ஏற்போம் என கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

அவ்வப்போது உடல்நலப்பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த George VI 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் திகதி தூக்கத்தில் இருந்தபோதே மரணமடைந்தார்.

தனது தந்தை மரணமடைந்த போது பிரித்தானிய மகாராணி தனது கணவர் பிலிப்புடன் கென்யாவிற்கு சென்றிருந்தார்.

காலை உணவை அருந்திக்கொண்டிருக்கையில் தனது தந்தையின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த இவர், உடனடியாக தனது கணவருடன் பிரித்தானிய அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.

தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு 25 வயதிலேயே அரியணை ஏறிய இவரது வயது தற்போது 92. சிறு வயதிலேயே பெரிய பொறுப்பினை இவர் ஏற்றுக்கொண்டாலும், இன்று வரை சிறப்பான ஆட்சியை வழங்கி வரும் மகாராணி, மிகவும் கண்டிப்பானவர் என கூறப்படுகிறது.

குறிப்பாக, மகாராணி என்கிற முறையில் அரச குடும்பத்து உறுப்பினர்களை அன்புடன் கலந்த அதிகாரத்தை பயன்படுத்தி தனது கட்டுக்குள் வைத்திருக்கிறார்.

சாமன்ய குடும்பத்தை சேர்ந்த டயானா அரச குடும்பத்து மருமளாகிய பின்னர், டயானாவின் கொள்கைகள் இவருக்கு பிடிக்காத காரணத்தால், தனது மகன் சார்லஸிடன் டயானாவை விவாகரத்து செய்யவும் வற்புறுத்தியவர் மகாராணி.

மகாராணியின் ஆட்சி குறித்து பல்வேறு செய்திகள் வெளியானாலும் இவரது கணவர் பிலிப் இவருக்கு உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அப்போதே அரச குடும்பம் மறுத்தது.

படிப்பறிவில்லாத பிலிப், கொஞ்சம் கூட மகாராணிக்கு ஏற்றவர் கிடையாது என்றும் மகாராணியை தவிர வேறு சில பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்த காரணத்தால் அவர் மகாராணிக்கு உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படமான Inside Buckingham Palace - இல் இதுகுறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும். தனது கணவரின் தவறு குறித்து அறிந்து 1956 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்குள்ளும் சிறு பிரிவு ஏற்பட்டதாகவும், அதன்பிறகு மகாராணி தனது கணவருக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பிரித்தானிய நடிகை Patricia Kirkwood என்பவருடன் இளவரசர் பிலிப்புக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதனை நடிகை மறுத்தார். பெண்களுடன் தொடர்பில் இருந்த பிலிப் குறித்த பல செய்திகள் வெளியானாலும் அரண்மனை சார்பில் இது மறைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இதுகுறித்த எவ்வித ஆதாரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்