பத்து கொலைகள், சொந்த பிள்ளைகள் துஷ்பிரயோகம்: கடைசி ஏமாற்றிய தாய்: வெளியாகியுள்ள அதிர்ச்சிக் கதை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கணவன் செய்த பத்துக் கொலைகளுக்கும் தான் பெற்ற பிள்ளைகளையே துஷ்பிரயோகம் செய்ததற்கும் உடந்தையாக இருந்ததை கடைசி வரை மறைத்து நல்லவள் போலவே நடித்த ஒரு பெண்ணின் கதையை நேற்று அவரது மகள் வெளியிட்டார்.

பிரித்தானியாவின் Gloucesterஐச் சேர்ந்தவர் Mae West. ஏழு உடன்பிறந்தவர்கள் இருந்தாலும் அவரது சகோதரியான Heather மட்டும் அவருக்கு மிகவும் நெருக்கம்.

ஆனால் Heatherன் 16ஆவது பிறந்த நாளுக்குப்பின் ஒரு நாள் அவள் காணாமல் போனாள்.

சிறிது காலத்திற்குப்பிறகு ஒரு நாள் பொலிசார் அவளது வீட்டுக் கதவைத் தட்டினார்கள். தோட்டத்தை தோண்டும்போது ஒரு இளம்பெண்ணின் எலும்புகள் கிடைத்தன, அவை Heatherஉடையவை.

பொலிசார் மேலும் தோண்டினார்கள். தோண்டத் தோண்ட பிணங்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன.

இன்னும் பத்து பெண்களின் உடல்களும், ஒரு சிறு குழந்தையின் உடலும். Maeயின் தந்தையான Fred West கைது செய்யப்பட்டதோடு குற்றங்களையும் ஒப்புக் கொண்டார்.

கொல்லப்பட்டதில் ஒரு பெண் அவரது முதல் மனைவி, குழந்தை அவர்களது குழந்தை. Fred West சிறையிலிருந்த காலகட்டத்தில் Fredஇன் மனைவியும் Maeயின் தாயுமான Rose அவரைக் குறித்து பல மோசமான கதைகள் சொன்னார்.

அவ்வளவையும் Mae நம்பினாள், காரணம் அவர் Mae மற்றும் அவரது சகோதரியையுமே பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் என்பது அவருக்கே நன்றாகத் தெரியும்.

பின்னர் சிறையிலிருந்த தந்தை பொலிசாரிடம் கதையை மாற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

தனது முதல் மனைவியையும் மகளையும் கொன்றதே Roseதான் என்று அப்படியே ஒரு பல்டி அடித்தார்.

பின்னர்தான், தன் சகோதரி முதல் கொல்லப்பட்ட அனைவரின் கொலைக்கும் உதவியாக இருந்தது தனது தாய்தான் என்பதும் தனது சகோதரியை தந்தை பாலியல் பலாத்காரம் செய்யும்போது அவளை பிடித்துக் கொண்டது தனது தாய்தான் என்ற உண்மையும் Maeக்கு தெரியவந்தது.

இவ்வளவு நாளும் தன் தாய் நிரபராதி என்று எண்ணியிருந்த Mae, பின்னர் அவளிடமிருந்து ஒதுங்கலானார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கு கடிதம் எழுதுவதைக் கூட நிறுத்திக் கொண்டார் Mae. ஒரு மன நல நிபுணரின் உதவியால் தன்னை தன் தாய் எவ்வளவு ஏமாற்றி உணர்வு ரீதியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டார் Mae.

இன்று தான் இழந்த உண்மையான அன்பை தன் பிள்ளைகள் இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் 40 வயதான Mae.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers