வெள்ளையர்களை மட்டும் பாலியல் அடிமைகளாக்கும் பிரித்தானிய பெண்: கூறும் காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வெள்ளையர்களை மட்டும் பாலியல் அடிமைகளாக்கும் ஒரு பிரித்தானியப் பெண், அவர்களைத் தவிர வேறு யாரிடமும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியாது, ஏனென்றால் இந்த உலகமே வெள்ளையர்களால்தானே ஆளப்படுகிறது என்கிறார்.

லண்டனில் விரிவுரையாளராக பணியாற்றும் Mistress Rebecca என்று அழைக்கப்படும் Reba Maybury (27) ஒரு தொழில்முறை dominatrix.

Dominatrix என்றால், பாலியல் விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம் ஆண்களை அடிமை போல் நடத்துவதில் மகிழ்ச்சி அடைபவர்கள் என்று பொருள்.

அதிலும் Reba ஒரு அரசியல் Dominatrix, அதாவது அரசியல்வாதிகளைக் குறிவைக்கும் பெண்ணியவாதி.

வலது சாரிக் கருத்துகள் கொண்ட மற்றும் வெள்ளையர்களை மட்டுமே குறிவைக்கும் Reba, சாட்டைகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்துவதற்கு பதில், பேசியே மன ரீதியாக ஆண்களை அடிமைப்படுத்தி விடுவாராம்.

அரசியல் வாழ்க்கையில் ஒரு முகத்தை பொதுமக்களுக்கு காட்டிவிட்டு, இன்னொரு பக்கம் அந்தரங்க வாழ்வில் மோசமானவர்களாக விளங்கும் மனிதர்களின் இரட்டை வேடத்தை தோலூரித்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்வதாகக் கூறுகிறார் Reba.

வரலாற்றுக் காலத்திலிருந்து பார்த்தாலே, ஆண்மை என்பதே பெண்ணை அடிமைப்படுத்துவதற்காகத்தான் என்றே காட்டப்படுவதாக கருதும் Reba, வலது சாரிக் கருத்துகள் கொண்ட ஆண் அரசியல்வாதி ஒருவரை சோசியலிஸ்டாகமாற்றுவதை விட பெரிய வெற்றி என்ன இருக்கிறது என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்