குடிபோதையில் பறக்கும் விமானத்தில் பெண்ணின் மோசமான செயல்: நீதிமன்றத்தின் தீர்ப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

குடிபோதையில் பறக்கும் விமானத்தில் சக பயணியை அடித்த பெண்ணுக்கு 12 மாதம் சிறை தண்டனை வழங்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் Devon கவுண்டியில் இருந்து ஸ்பெயினுக்கு பயணிகள் விமானம் ஒன்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி கிளம்பியது.

விமானத்தில் ஏறும் போதே குடி போதையில் இருந்த ஷீலியா தாமஸ் (55) என்ற பெண் பயணி விமானம் கிளம்பியதும் மோசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

அதாவது விமானத்தில் கத்தியபடி இருந்த ஷீலியா பின்னர் சக பயணியை தாக்கினார்.

ஷீலியாவை கட்டுப்படுத்த முடியாமல் ஊழியர்கள் தவித்த நிலையில், விமானி மீண்டும் Devon கவுண்டியில் உள்ள விமான நிலையத்துக்கு விமானத்தை செலுத்தினார்.

இதன் பின்னர் பொலிசார் ஷீலியாவை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷீலியா மீது வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் ஷீலியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers