இளம்பெண்ணின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கும் நபர்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியர் ஒருவர் இளம்பெண் ஒருவரின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Staffordshireஐச் சேர்ந்த ஒருவர் Sharon Boalch (50) மற்றும் அவரது மகள் Shakira Jefferies (16) ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சி அந்த பெண்களின் வீட்டில் உள்ள கெமராவில் பதிவாகியுள்ளது.

நடந்தது என்னவென்றால் அந்த நபரின் இரண்டு நாய்கள் Shakiraவின் செல்லப்பிராணியான பூனையைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டன.

அந்த காட்சிகளும் கெமராவில் பதிவாகியுள்ளன. அதற்காகத்தான் அவர் வந்து அந்த பூனையின் சொந்தக்கரரான Shakiraவின் முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறார்.

Shakira அவரை தட்டிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றாலும் அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவர் அழுவதைக் கண்டு வெளியே வரும் Shakiraவின் தாயார் நடந்ததை அறிந்ததும் அவரால் கோபத்தை அடக்க முடியவில்லை.

நீங்கள் அந்த நாய்களின் வாயைக் கட்டியிருக்க வேண்டும், இன்று பூனையைக் கொன்ற நாய்கள், நாளை ஒரு குழந்தையைக் கடித்துக் கொன்றால் என்ன செய்வீர்கள் என்று சத்தமிடுகிறார்.

எனவே நடந்த சம்பவம் குறித்து பூனையின் உரிமையாளர்கள் பொலிசாரிடம் புகரளித்துள்ளனர். பொலிசாரும் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள் என்றாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்