பிரித்தானியாவில் இந்திய இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன? அவரை நினைத்து கதறும் கணவன்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளம் பெண்ணொருவர் பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் ரவினா (29). இவர் அங்கு படித்து முடித்துவிட்டு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சாகர் பகவான் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் பிரித்தனியாவுக்கு குடிபெயர்ந்தார் ரவினா.

இங்கு தம்பதிக்கு கடந்த 2012-ல் முதல் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சன்வி என பெயர் வைத்தனர்.

இந்நிலையில் ரவினா மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து வேல்ஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 15ஆம் திகதி அவருக்கு சிசேரின் மூலம் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் இந்த மகிழ்ச்சி சாகர் மற்றும் குடும்பத்தாருக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை, குழந்தை பெற்ற சில நிமிடங்களில் ரவினா உயிரிழந்தார்.

இதையடுத்து சாகர் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

இறப்புக்கான காரணம் இன்னும் ரவினா குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படாத நிலையில் அது மேலும் அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாகர் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஆஷிஸ் கூறுகையில், ரவினா இறக்கும் தருவாயில் சாகர் மற்றும் அவர் தாய் உடனிருந்தனர், அவரின் திடீர் இழப்பு அவர்களுக்கு பேரிடியாக உள்ளது.

இந்த துயரத்தில் இருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை, சாகருக்கு இது வாழ்க்கையில் பேரிழப்பு என கூறியுள்ளார்.

இதனிடையில் கடந்த 28ஆம் திகதி நடந்த ரவினா இறுதிச்சடங்கில் Newcastle,Swindon மற்றும் London ஆகிய இடங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ரவினா அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகக்கூடியவராக இருந்தார் என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்