தாய் சிங்கத்தை ஒரு நொடியில் பதற வைத்த குட்டி சிங்கம்... என்ன செய்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா
714Shares

ஸ்காட்லாந்தில் தாய் சிங்கம் ஒன்றை குட்டி சிங்கம் மிரட்டிய வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஸ்காட்லாந்தில் இருக்கும் எடிபெர்க் பூங்காவில் பெண் சிங்கம் ஒன்று சமீபத்தில் மூன்று குட்டிகள் ஈன்றது. இதையடுத்து தாய் சிங்கம் மற்றும் அதன் குட்டிகள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டது.

இருப்பினும் பாதுகாப்பாக அங்கு அதிகாரிகள் சிசிடிவி கமெராவை பொருத்தினர். அப்படி அவர்கள் சிசிடிவி கமெராவை கவனித்து வந்த போது, அந்த குட்டி சிங்கம் ஒன்று செய்த சேட்டை தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.

அதில், பெண் சிங்கம் படுத்து தனது இரண்டு குட்டிகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது மூன்றாவது குட்டி மெதுவாகத் தாய் சிங்கத்தின் பின்னால் வந்து பயமுறுத்தியது. இதனால் ஒரு நொடி பயந்து போன தாய் சிங்கம் அலறியடித்துக்கொண்டு எழுந்து கடிக்க முற்பட்டது.

அதன் பின் குட்டி சிங்கம் என்றவுடன் மீண்டும் படுத்துக் கொண்ட, அந்த குட்டி சிங்கத்தையே பார்த்து கொண்டிருந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்