நாடு கடத்தப்படுவதற்கு எதிராக பிரித்தானிய அலுவலகம் முன் குவிந்த இலங்கை தமிழர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி இலங்கை தமிழர்கள் இன்று உள்துறை அலுவலகம் முன் அணிவகுத்துள்ளனர்.

லண்டனில் ஒரு தமிழ் மாணவருக்கு தஞ்சம் மறுக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக நீக்கத்திற்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்தி வெளியானதை அடுத்து இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டிசம்பர் 2017 இல், ஐ.நா. மனித உரிமைகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. அங்கு சாட்சியங்களைப் பெற்ற பின்னர், திரும்பி வந்த பல புகலிடக் கோரிக்கையாளர்கள் "தாக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

மேலும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறுவது தொடர்பான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தமிழ் கார்டியன் பத்திரிக்கையிடம் பேசுகையில், "எங்கள் சகோதர சகோதரிகளின் நாடுகடத்தலை பிரித்தானியா முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது" என்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 2019 இல், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்கிற அமைப்பு எடுத்த அறிக்கையின் படி, இலங்கையில் 2015-17 முதல் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 76 தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், பல சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறுகிறது.

மற்றொருவர் கூறுகையில், "தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியா தொடர்ந்து நாடுகடத்தினால், இலங்கை அடிப்படையில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கும்" எனக்கூறியுள்ளார்.

மேலும் ஒரு எதிர்ப்பாளர், இலங்கையர்கள் எங்கள் குடும்பங்களை சித்திரவதை செய்வார்கள், பாலியல் பலாத்காரம் செய்வார்கள் அல்லது காணாமல் ஆக்குவார்கள் என்பதை அறிந்தே அரசாங்கம் அவர்களை திருப்பி அனுப்புகிறது.

அவர்கள் உள்துறை அலுவலகத்திற்கு வெளியே, "பிரிதி படேல் கண்களைத் திற! எங்கள் குடும்பங்களை நாடு கடத்த வேண்டாம்!"

"நிறுத்து, தமிழர்களை நாடு கடத்துவதை நிறுத்து!"

"போரிஸ் ஜான்சன் உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது!" என கோஷமிட்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்