பிரெக்சிட்: ஜனவரி 31 வரை பிரெக்சிட்டை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் திகதியை அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான Donald Tusk தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் flextension என்று அழைக்கப்படும் இந்த பிரெக்சிட் நீட்டிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, ஒப்பந்தம் ஒன்று நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், அந்த திகதிக்கு முன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாம்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவுக்கு முன்கூட்டியே, அதாவது, டிசம்பர் மாதம் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தும் திட்டத்தை முன்வைத்துள்ள நிலையில், அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தயாராகும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்