கொடூரமான மரணம்... ஐஸ் கட்டியாக உறைந்த நிலையில் பெண்களின் சடலம்: லண்டனில் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனில் குடியிருப்பு ஒன்றில் குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைவு செய்யப்பட்டிருந்த பெண்களின் சடலம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை இன்று துவங்கியுள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள கேனிங் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைவு செய்யப்பட்டிருந்த இரு பெண்களின் சடலம் மீட்கப்பட்து.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 35 வயது ஜாஹித் யூனஸ் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

3 பிள்ளைகளின் தாயாரான மிஹ்ரிகன் முஸ்தபா மற்றும் ஹென்றிட் சுக்ஸ்(34) ஆகிய இருவரையுமே ஜாஹித் யூனஸ் கொலை செய்து குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைவு செய்திருந்தார்.

பிரேத பரிசோதனையில் அவர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டு, அந்த காயங்களால் மரணமடைந்துள்ளது தெரியவந்தது.

ஹங்கேரிய நாட்டவரான ஹென்றிட் சுக்ஸ் நிலையான முகவரி ஏதுமின்றி பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் தங்கி வந்துள்ளார்.

கடைசியாக அவர் தொடர்பில் 2016 ஆம் ஆண்டில் இருந்து எந்த தகவலும் இல்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேப்போன்று சைப்ரஸ் நாட்டவரான மிஹ்ரிகன் முஸ்தபா 2018 மே மாதத்தில் இருந்தே மாயமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வந்த பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் ஜாஹித் யூனஸ் குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையிலேயே அவரது குடியிருப்பில் இருந்து குளிசாதனப்பெட்டிக்குள் மறைவு செய்யப்பட்டிருந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

மூன்றாண்டுகளாக அவர் அந்த சடலங்களை அவரது குடியிருப்புக்குள் மறைவு செய்திருந்ததும் அம்பலமானது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers