ஒரே பள்ளியைச் சேர்ந்த ஐந்து ஆசிரியர்களுக்கு கொரோனா: அதிகாரிகள் எடுத்துள்ள நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பி வரும் நிலையில் பிரித்தானியாவிலுள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஐந்து ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பிரித்தானியாவின் Haverhill நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சிலர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். எனவே அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மூடப்பட்ட பள்ளி நாளை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 மற்றும் 11ஆம் ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் இன்றுதான் முதல் நாளாக பள்ளிக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்கள் உடனே வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்