பிரித்தானியாவில் கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி உடனடி அபராதம் கிடையாது: அதற்கு பதில்...

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் (on-the-spot Covid fines) விதிக்கப்பட்டு வந்தது.

இதுவரை, 13 பேருக்கு கொரோனா விதிகளை மீறியதாக 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இனி பிரித்தானியாவில் கொரோனா விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் கிடையாது என தேசிய பொலிஸ் தலைவர்கள் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதற்கு காரணம் என்னவென்றால், இந்த அபராதத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது 28 நாட்களுக்குள் அபராதம் செலுத்துவோருக்கும், தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோருக்கும் அபராதத்தொகையில் பெரும் வித்தியாசம் இருந்தது.

நீதிமன்றம் சென்றவர்களுக்கு, இந்த தொகையை செலுத்தும் அளவுக்கு அவர்களுக்கு வசதி இருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் அபராதம் விதிக்கப்பட்டது, அதாவது வசதியில்லாதவர்களுக்கு குறைந்த தொகையே அபராதமாக விதிக்கப்பட்டது எனலாம்.

ஆகவே, சிலருக்கு ஒரு தொகை, மற்றவர்களுக்கு வேறு ஒரு தொகை அபராதம் என்பதால் சர்ச்சை எழுந்துள்ளதையடுத்து, இனி பொலிசார் உடனடி அபராதம் வசூலிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக தவறு செய்பவர்களை அப்படியே விட்டு விட முடியாது அல்லவா? ஆகவே, இனி பிரித்தானியாவில் கொரோனா விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு நீதிமன்ற சம்மன் வழங்கப்படும்.

அவர்கள், நீதிமன்றத்திற்கு சென்று, நீதிமன்றம் கூறும் அபராதத்தொகையை செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்