இங்கிலாந்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள ஒரு நன்மை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

இங்கிலாந்தில் பொதுமுடக்கத்தால் எதிர்பாராத ஒரு நன்மை ஏற்பட்டுள்ளது. ஆம், பொது சுகாதாரத்துறை, இதுவரை ஒருவருக்கு கூட ப்ளூ காய்ச்சல் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கடுமையான பொதுமுடக்கத்தால் இந்த நன்மை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக இங்கிலாந்தில் இந்த காலகட்டத்தில் ப்ளூ காய்ச்சல் பரவல் உச்சத்தில் இருக்கும்.

ஆனால், இம்முறை ஒருவருக்குக்கூட ப்ளூ கண்டறியப்படவில்லை. பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த மருத்துவரான Dr Vanessa Saliba, சமூக விலகல், மாஸ்க் அணிதல் மற்றும் கை கழுவுதல் போன்ற சுகாதார விதிகளை கடைப்பிடித்ததும், சர்வதேச பயணம் செல்வது குறைந்ததுமே இதற்கு காரணம் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்