71 வயது ஆசிரியரை மணக்கும் 25 வயது மாணவி: குடும்பத்தினரின் வித்தியாசமான ரியாக்‌ஷன்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

வயதுக்காக காதலை வீணாக்கக்கூடாது என்கிறார் 71 வயது முன்னாள் ஆசிரியரை மணக்கும் 25 வயது மாணவியின் தாய்.

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழக மாணவியான Cameron Platt (25) தனது முன்னாள் பேராசிரியரை மணமுடிக்க இருக்கிறார்.

Cameronஇன் தந்தையாகிய John Plattஐ விட, அவர் மணக்க இருக்கும் பேராசிரியர் Lee Clark Mitchellக்கு (71) நான்கு வயதுதான் குறைவு, என்றாலும் Cameronஇன் குடும்பத்தார் அவரது திருமண முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள்.

வயதுக்காக காதலை வீணாக்கக்கூடாது என்கிறார் Cameronஇன் தந்தையின் இரண்டாவது மனைவி Wythe Platt (72).

வயது வித்தியாசம் குறித்து எந்த கவலையும் தெரிவிக்காத Wythe, சொல்லப்போனால் Cameronக்கு ஆதரவாக பேசுகிறார்.

தனது தந்தைக்கும் தாய்க்கும் இடையில் உள்ள வயது வித்தியாசத்தைப் பார்த்து வளர்ந்த Cameronக்கு அது பழகிவிட்டது என்று கூறும் Wythe, அதனால் தனக்கும் தனது வருங்கால கணவருக்கும் உள்ள வயது வித்தியாசம் அவருக்கு பெரியதாக தெரியவில்லை என்கிறார்.

Cameronஇன் தந்தைக்கும் தாய்க்கும் இடையில் 19 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்