3 மாதத்திற்கு முன் பிறந்த குழந்தை.. 3 லட்ச பவுண்ட் பில்: அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் பிரித்தானியா தம்பதி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியா தம்பதியனருக்கு மூன்று மாதங்கள் முன்னதாக குழந்தை பிறந்த நிலையில் 300,000 பவுண்ட் மருத்துவமனை கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Lincs, Scunthorpe பகுதியை சேர்நத யெரிடியானா சாசரேஸ் மற்றும் அவரது வருங்கால கணவர் லூயிஸ் போர்ரில் ஆகியோர் அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள குடும்பத்தை சந்திக்க சென்றுள்ளனர்.

அப்போது, கர்ப்பிணியாக இருந்த சாசரேஸ்வுக்கு வலி ஏற்பட மருத்துவமனையில் அவர்களின் முதல் குழந்தையான லில்லியைப் பெற்றெடுத்தார்.

குறைமாதத்தில் பிறந்த குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருந்ததால் 3 முதல் 4 மாதம் தொடர் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதியினர் எதிர்வரும் வரும் நவம்பர் மாதம் வரை அமெரிக்காவிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 When Lily was born she was not moving or breathing but was luckily saved by doctors

மேலும், அவர்களிடம் மருத்துவ காப்பீடு இல்லாததால் மருத்துவமனை மற்றும் ஹொட்டல் கட்டணம் என சுமார் 3,00,000 பவுண்ட் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Lily weighed a tiny 1lb, 11oz when she was born

இளம் பெற்றோருக்கான பணத்தை திரட்ட உதவுவதற்காக நண்பர்கள் GoFundMe பக்கத்தை அமைத்து நிதி திரட்டி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்