படுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை செல்கிறார்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தன் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டதற்காக, ஒரு தாய் கொடுத்த தண்டனை அவரது குழந்தையின் உயிரையே பறித்துவிட்டது.

கட்டுப்பாடுகள் நிறைந்த சீனக் குடும்பம் ஒன்றில் வளர்ந்தவர் Lin Li (28). புரூக்ளினில் குடும்பத்துடன் வசிக்கும் Lin Li, அதே கட்டுப்பாடுகளுடன் குழந்தைகளை வளர்ப்பதாக எண்ணி, தன் குழந்தைகள் தவறு செய்தால், அவர்களை கடுமையாக தண்டித்துள்ளார்.

அவர் தனது நான்கு வயது மகன் செய்த தவறுக்காக அவனது தலையை பிடித்து தண்ணீருக்குள் அழுத்தியதாக கூறப்படுகிறது.

அதேபோல், அவரது இரண்டு வயது மகள் Melody Zheng படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவளையும் பிடித்து அவளது தலையை தண்ணீருக்குள் அமிழ்த்தியிருக்கிறார்.

அவளை அப்படியே குளியலறைக்குள் விட்டு விட்டு Lin Li திரும்பியுள்ளார். அவரது மகள் Melody தண்ணீரில் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறாள், ஆனால் அதை Lin Li கவனிக்கவில்லை.

தான் மோசமான தாய் இல்லை என்று கூறி கண்ணீர் வடிக்கும் Lin Li, தான் செய்த தவறு, மகளை கவனிக்காமல் குளியலறையிலேயே விட்டு விட்டு வந்ததுதானே தவிர, அவளைக் கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்கிறார்.

என்றாலும் Melody உயிரிழந்ததால் Lin Liக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான் செய்தது தவறு, என் மகளை இழந்தது என்னை வேதனைப்படுத்துகிறது, ஆகவே, நீங்கள் எனக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தாலும், அதை நான் மனமார ஏற்றுக்கொள்கிறேன் என்று கண்ணீருடன் தெரிவித்தார் Lin Li.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...