உலக பணக்கார பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் அமேசான் CEO-வின் முன்னாள் மனைவி! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in பெண்கள்

உலக பணக்கார பெண்களின் பட்டியலில், அமேசான் சி.இ.ஓ ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட் முதலிடத்தில் உள்ளார்.

பிரபல நிறுவனமாக ப்ளூம்பெர்க் 2020-ஆம் ஆண்டிற்கான உலகின் பணக்கார பெண்களுக்கான பட்டியலை வெளியிட்டது.

அதில், அமெரிக்காவின் மெக்கென்சி ஸ்காட்(50) பணக்கார பெண்மணிகளில் இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளார். 50 வயதாகும் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 6,800 கோடி டொலராக உள்ளது.

இப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த லோரியால் அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் வாரிசுதாரர் பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் 6,600 கோடி டொலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மெக்கென்சி தனது கணவர் ஜெப் பெசோசுடன் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றார்.

அப்போது, அவரிடமிருந்த அமேசானின் பங்குகளில் கால்வாசியை பெற்றார். நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளான அவற்றின் அப்போதைய மதிப்பு 3,500 கோடி டொலர் ஆகும்.

தற்போது, அதன் பங்கு மதிப்பு இப்போது இரட்டிப்பானதால் அவரது சொத்து மதிப்பும் இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலம் உலகளவில் 12-வது பணக்கார பெண்மணியாக மெக்கென்சி திகழ்கிறார்.

அவர் ஜூலை வரை 170 கோடி டொலர் சொத்துக்களை 166 அமைப்புகளுக்கு தானமாக தந்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்