புதிய வடிவமைப்பில் ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புதிய ஐபோனை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் உலகளாவிய மென்பொருள் வடிவமைப்பாளர் மாநாட்டினை நடாத்தியிருந்தது.

இந்நிகழ்வில் முக்கிய அறிவிப்பு ஒன்றினை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அதாவது மொபைல் சாதனங்களுக்குரிய அப்பிளிக்கேஷனை பெற்றுக்கொள்ள உதவும் ஆப்ஸ் ஸ்டோரின் வடிவமைப்பினை மாற்றியுள்ளதாக தெரிவித்திருந்தது.

இப்புதிய வடிவமைப்பானது iOS 11 இயங்குதளப் பதிப்பில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பயனர்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய வடிவமைப்பு இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments