வாட்ஸ்அப் செயலி மிகவும் பாதுகாப்பானது: வாட்ஸ்அப் நிறுவனம்

Report Print Kabilan in ஆப்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்கள் Track செய்யப்படுவதில்லை என, பயனர்களின் குறுந்தகவல்களை சேகரிப்பது குறித்த வல்லுநர்களின் கருத்துக்களுக்கு, வாட்ஸ்அப் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

Cambridge Analytica விவகாரத்தைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க தொழிலதிபரான விவேக் வாத்வா, வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் அந்நிறுவனம் அறிவித்தப்படி பாதுக்காப்பானதாக இருக்கலாம்.

ஆனால், அழைப்புகல் சார்ந்த Meta Data-வினை அந்நிறுவனம் பயன்படுத்தலாம் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தும் சுமார் 20 கோடி பேரின் தகவல்கள், அறிவித்த அளவு பாதுகாப்பாக இருக்காது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வல்லுநர்களின் கருத்துக்கு பதில் அளித்துள்ள வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ’தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து மிக குறைந்த அளவு தகவல்களை மட்டுமே வாட்ஸ் அப் சேகரிக்கிறது.

வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்கள் முழுமையாக Encrypt செய்யப்ப்படுகின்றன. வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Invite Link அம்சம் Group Admins விரும்பினால் பயன்படுத்தக்கூடிய வகையில் வழக்கப்பட்டுள்ளது. இவற்றை மிகவும் நம்பகத்தன்மை கொண்டவர்களிடம் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

உலகளவில் சுமார் 100 கோடி பேர் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில், அதிக அளவில் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலிகளில், வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான சேவையாக உள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்