குழந்தையை ஏரியில் தூக்கியெறிந்த தந்தை! ஏன்? அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

நீச்சல் கற்று கொடுக்கும் நோக்கில் தன் குழந்தையை ஏரியில் தூக்கி வீசிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஒரு ஏரியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் தற்போது பரவி வருகிறது.

அதில் ஒரு நபர் தன்னுடைய குழந்தையை ஏரியின் அருகில் கூட்டி வருகிறார். பின்னர் குழந்தையின் உடலில் இருக்கும் சட்டையை அவர் சுழற்றுகிறார்.

அதன் பின்னர் தண்ணீரை பார்த்த பயத்தில் குழந்தை அழுவதை கூட பொருட்படுத்தாமல் குழந்தையை தூக்கி ஏரியில் போடுகிறார்.

அதன் பின்னர் சில நொடிகள் கழித்து குழந்தையின் தந்தையும் ஏரியின் உள்ளே குதிக்கிறார்.

இதையடுத்து குழந்தை அழுது கொண்டே கரையை நோக்கி வருவது போல அந்த காட்சியில் உள்ளது.

சிறு குழந்தைக்கு நீச்சல் கற்று தர தந்தை இப்படியான செயலை செய்தார் என தெரிகிறது.

ஆனாலும், குழந்தையை அழவிட்டு இப்படி செய்வது தவறு என வீடியோவை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments