ஒரே மாதத்தில் கொலை செய்யப்பட்ட 6700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள்

Report Print Kabilan in ஆசியா
0Shares
0Shares
Cineulagam.com

மியான்மரில் வன்முறை பரவிய முதல் மாதத்தில் மட்டுமே, சுமார் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் நாட்டின் ராக்கைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசித்து வந்த ரோஹிங்ய இன இஸ்லாமியர்களின் மீது, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், அவர்களது வீடுகளை தீவைத்து எரித்ததாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்ய இன மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு அகதிகளாக இருக்கும் ரோஹிங்ய மக்களிடம், மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் எனும் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில், வன்முறை நடத்தப்பட்ட முதல் மாதத்தில் மட்டுமே, சுமார் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் ஐந்து வயதுக்குட்பட்ட 730 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 69 சதவீதம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாகவும், 9 சதவீதம் பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்