மகளை பார்க்க கனடாவிற்குள் நுழைந்த தாயார்: எல்லையிலேயே பலியான பரிதாபம்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து பயணம் செய்த தாயார் ஒருவர் கனடா எல்லையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கானா நாட்டை சேர்ந்த Mavis Otuteye(57) என்ற பெண்மணி அமெரிக்காவில் பார்வையாளர் விசாவில் தங்கி வந்துள்ளார்.

ஆனால், இவரது விசாக்காலம் 2006-ம் ஆண்டில் முடிவடைந்ததால் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கி வந்துள்ளார். இவருடைய மகள் கனடாவில் உள்ள ரொறொன்ரோ நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், 5 கிழமைகளுக்கு முன்னர் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காகவும், மகளுடன் சில நாட்கள் தங்குவதற்காகவும் தாயார் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளார்.

கனடா எல்லைக்குள் நுழைந்ததும் கடுமையான குளிர் அவரை நிலைகுலைய செய்துள்ளது. எனினும், முயற்சியை கைவிடாத அவர் மகளையும் பேத்தியையும் பார்க்க ஆவலாக சென்றுள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட நாளுக்குள் தாயார் வராததால் அதிர்ச்சி அடைந்த மகள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் மனிடோபா எல்லை முழுவதிலும் தேடியுள்ளனர். அப்போது, ஓரிடத்தில் தாயார் சடலமாக கிடந்துள்ளார்.

உடலை மருத்துவ பரிசோதனை செய்தபோது உடலில் போதுமான வெப்பம் இல்லாத காரணத்தினால் அவரது உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய மகள் ‘ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தாயாரிடம் கூறினேன். ஆனால், அவர் எனது வார்த்தைகளை ஏற்காமல் புறப்பட்டு தற்போது மரணத்தை தழுவியுள்ளார்’ என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அகதிகளுக்கு எதிரான சட்டத்திட்டங்கள் அமலில் இருப்பதால் அந்நாட்டை விட்டு வெளியேறி கனடாவில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு கனடாவின் அரசாங்கம் நல்ல தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என மனிடோபா முதலமைச்சரான Brian Pallister என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments