பழங்குடியின மக்களுக்கு உதவ முன்வந்துள்ள சுகாதாரத் திணைக்களம்

Report Print Dias Dias in கனடா
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஒன்ராறியோவின் வட பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவ கனேடிய சுகாதாரத் திணைக்களம் முன்வந்துள்ளது.

பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின குடும்பங்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த குடியிருப்பு பகுதிகளுக்கு தமது மருத்துவ உத்தியோகத்தர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டில் இதுவரையில் ஒன்ராறியோவின் வட பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் 18 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரமொன்று தெரிவிக்கின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments