கனடாவில் பலத்த காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன: இருவர் பலி, ஒரு லட்சம் பேர் இருளில் தவிப்பு

Report Print Balamanuvelan in கனடா
337Shares
337Shares
lankasrimarket.com

கனடாவில் தெற்கு ஒண்டாரியோ பகுதியில் நேற்று வீசிய பலத்த காற்றில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் ஒரு லட்சம்பேர் இருளில் தவித்தனர்.

Hamilton பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த வயர்களை அப்புறப்படுத்த முயன்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கிச் சரிந்தார்.

அவசர உதவிக் குழுக்கள் வந்து பரிசோதிக்கும்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டிருந்தது தெரிய வந்தது.

Halton பகுதியில் இருவர் மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று ஒரு மரம் அவர்கள் மீது சாய்ந்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார், மற்றொருவர் ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலைக்குள் சுமார் 685 தொலைபேசி அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்தன. எனவே பாதிப்பு அதிகம் என்பதை உணர்ந்த தீயணைப்பு படையினர் ஒரே இடத்திற்கு அதிக பேரை அனுப்புவதைக் குறைத்து அவசர அழைப்புகளுக்காக மீதமுள்ளோரை காத்திருப்பில் வைத்தனர்.

Pearson விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் காற்றில் பறந்தன. விமான சேவை ஒரு மணி நேரம் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் விமான சேவைகள் தாமதமாகலாம் என்று விமான நிலையம் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

புயல் எச்சரிக்கை முடிவுக்கு வந்த போதும் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்னும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மின் வெட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் சில இடங்களில் விழுந்ததால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. மின் வயர்களில் போர்டுகள் விழுந்ததாலும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை பின்னர் சகஜ நிலையை அடைந்தது.

மின்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானவர்கள் இருளிலேயே பொழுதைக் கழிக்க வேண்டியதாயிற்று.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்