ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துத் தருமாறு வேண்டுகோள்

Report Print Yathu in சமூகம்
0Shares
0Shares
lankasri.com

முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் ஆரம்பக் கல்விகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனைத் தீர்ப்பதற்கு மத்திய மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள 62 பாடசாலைகளில் மூடிய நிலையில் காணப்படுகின்ற பெருங்குளம் பாடசாலை தவிர்ந்த 61 பாடசாலைகளிலும் 8,600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவில் காணப்படுகின்றது.

குறிப்பாக, பின்தங்கிய பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றன.

இதேவேளை, ஆரம்பப்பிரிவுக்கான ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகளவில் காணப்படுகின்றது.

இவ்வாறு மீள்குடியேற்றத்தின் பின்னர் கடந்த ஒன்பது வருடங்களாக இந்த ஆசிரியர் பற்றாக்குறை தீரக்கப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது எனவும் இதனைத் தீர்ப்பதற்கு மத்திய மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையினைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகையில்,

துணுக்காய் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட 61 பாடசாலைகளிலும் 8,600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர், ஆரம்ப கல்விக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

இருந்தபோதும், கடந்த காலங்களைப் போன்றல்லாது ஆசிரியர் வெற்றிடம் நிரப்பப்பட்டு வருகின்றது.

புதிய நியமனங்கள் வழங்கப்படும் போது, இப்பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்