ஶ்ரீலங்கன் விமான சேவை அமெரிக்காவின் கைகளுக்கு செல்கின்றது?

Report Print Shalini in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக இறுதியாக தெரிவு செய்யப்பட்ட இரு நிறுவனங்களில் TPG என்ற அமெரிக்க நிறுவனம் தகுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் இரான் விக்ரமரத்ன இதனை குறிப்பிட்டள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா நிறுவனம் என்பவற்றை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்வதற்காக 10 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இதில் இறுதியாக இலங்கையுடன் தொடர்புபட்ட பி.எஸ். எயார் நிறுவனம், மாலைத்தீவின் சுப்பர் குரூப் நிறுவனம், அமெரிக்காவின் TPG நிறுவனம் ஆகியன தெரிவாகியிருந்தன.

இவற்றிலிருந்தே TPG என்ற அமெரிக்க நிறுவனம் தகுதியானது என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments