இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சார்லோட் ஓய்வு

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை சார்லோட் ஓய்வு
0Shares
0Shares
lankasrimarket.com

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

1996ம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமானவர் சார்லோட் எட்வர்ட்ஸ்(வயது 36).

இதுவரையிலும் 23 டெஸ்ட், 191 ஒருநாள், 95 டுவென்டி-20 போட்டியில் விளையாடியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக அணித்தலைவராக இருந்து வரும் சார்லோட் தலைமையிலான அணி 2009ம் ஆண்டு ஒருநாள் மற்றும் 20 ஓவர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வி கண்டது.

இதற்கு வீராங்கனைகள் போதிய உடல்தகுதியுடன் இல்லாததே காரணம் என பயிற்சியாளர் மார்க் ராபின்சன் கருத்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்தே சார்லோட் ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது, எனினும் உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளதாக சார்லோட் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments