இது அவுட் இல்லையா? கோபத்தில் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இங்கிலாந்து மூன்று வித தொடர்களையும் இழந்து வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளது.

இத்தொடரின் டி 20 போட்டியில் நடுவரின் சில தவறான முடிவுகள் இரு அணியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து வீரர் மோர்கன் தாங்கள் இரண்டாவது டி 20 போட்டியில் தோல்வியடைந்தற்கு நடுவரும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் மூன்றாவது டி 20 போட்டியின் போது இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, நடுவரிடம் சென்று வாக்குவாத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோவை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் அப்போட்டியின் முதல் ஓவரை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் நெக்ரா, இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராய்க்கு வீசினார். இதில் முதல் பந்தை ராய் எதிர் கொண்ட போது பந்தானது அவரது பின் காலில் பட்டது.

இதனால் நெஹ்ரா உடனடியாக அவுட்டிற்கு நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவரோ அவுட்டில்லை என்று கூறினார். இதனால் கோபமடைந்தது போல் கோஹ்லி நடுவரிடம் சென்று இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments