தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரைக் கண்டால் பெருமையாக உள்ளது: ஸ்மித் புகழாரம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவில் நடைபெற்று வரும் பத்தாவது ஐபிஎல் தொடர் முடியும் தருவாயில் உள்ளது. முதல் பிளே ஆப் சுற்றில் ஸ்மித் தலைமையிலான புனே அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் மும்பை அணியும் ஹைதராபாத் அணியும் மோதும் ஆட்டம் உள்ளது. அப்போட்டியில் வெற்றி பெறும் அணி புனே அணியுடன் மோதும்.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றின் வெற்றி குறித்து புனே அணியின் தலைவர் ஸ்மித் கூறுகையில், இந்த தொடரில் நாங்கள் மும்பை அணியை மூன்று முறை தோற்கடித்துள்ளோம்.

ஆட்டத்தை மோசமாக தொடங்கினாலும் சரியான நேரத்தில் 162 ஓட்டங்களை குவித்தோம், டோனி மிக அற்புதமாக விளையாடினார்.

எங்களது திட்டங்களை களத்தில் சரியாக செயல்படுத்தினோம். இந்த தொடரில் பந்து வீச்சில் சீரான வேகத்தை பயன்படுத்த முயற்சி செய்தோம். அது இந்த ஆட்டத்தில் கைகொடுத்தது, பனிப்பொழிவு இருந்த போதும் பந்தை சரியாக பிடித்து வீச முடிந்தது.

மும்பை அணியை ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டோம். வாஷிங்டன் சுந்தர், சரியான நீளத்தில் அபாரமாக பந்து வீசினார்.

தொடரின் முக்கியமான கட்டத்தில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது. பல்வேறு ஆட்டங்களில் எங்களுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ள அவரால் எங்களுக்கு பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments