இலங்கை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் முக்கிய மாற்றம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட இந்திய அணியில் காயமடைந்துள்ள முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகார் தவான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று அவர்களுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த போட்டிகள் வரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ளன. இந்நிலையில், இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை தொடரில் காயமடைந்துள்ள இந்திய வீரர் முரளி விஜய் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகார் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

பேட்டிங் பயிற்சியில் முரளி விஜய் ஈடுபட்டிருந்த போது அவரின் வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Jaikumar Pushpanathan • Now

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments