மிகவும் பிடித்த அணித்தலைவர் இவர் தான்: அஸ்வின் ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இந்திய அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் தனக்கு பிடித்த அணித்தலைவர் யார் என்பதை வெளிபடுத்தியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஸ்வினிடம், கங்குலி, டோனி, கோஹ்லி இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய அணித்தலைவர் யார் என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

advertisement

இதற்கு பதிலளித்த அஸ்வின், நான் முதல் முதலில் 2011ல் டோனி தலைமையில் தான் விளையாடினேன். பிறகு 2015ல் இருந்து டெஸ்ட் தொடர்களில் கோஹ்லி தலைமையில் விளையாடினேன்.

2007 முதல் டோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அணைத்து ஐசிசி தொடர்களிலும் வெற்றி பெற்றது.

பிறகு கோஹ்லி டெஸ்ட் அணி தலைவரானார். அப்போது இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது.பிறகு தென் ஆப்பிரிக்கா அணியையும் வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது.

இதில் எனக்கு பிடித்த அணித்தலைவர் யார் என்று கேட்டால் நான் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலியை தான் சொல்வேன்.

நான் சிறிய வயதில் இருந்து கங்குலியை பார்த்து தான் வள்ர்ந்தேன்,அவர் இந்திய அணியை திறமையாக வழி நடத்தி செல்வார் அது எனக்கு பிடிக்கும். அவர் இடம் இருந்து நான் நிறைய காத்து கொண்டு இருக்கிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்