அவுஸ்திரேலிய அபார வெற்றி...கில்லி போல பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர்

Report Print Basu in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணி எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் மோதிய போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

advertisement

வேட், ஸ்டாய்னிஸ் அதிரடியால் அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ஓட்டங்கள் குவித்தது.

ஸ்டாய்னிஸ் 60 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்களும், வேட் 24 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்களும் எடுத்து அணிக்குப் பெரிதும் உதவினார்கள்.

பிசிசிஐ தலைவர் லெவன் அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அபாரமாகப் பந்து வீசி 8 ஓவர்களில் 23 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கடினமான இலக்கை எதிர்கொண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய லெவன் அணி 48.2 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் அவுஸ்திரேலிய அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்டன் அகர்4 விக்கெட்டுகளையும் கேன் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்