டோனி இவரை எப்படி தான் சமாளித்தாரோ? புலம்பும் சகா

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்திய டெஸ்ட் அணியில் டோனி ஓய்வு பெற்ற பின்பு, அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்தவர் விரிதிமன் சகா.

இதைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடத்தை பிடித்துக் கொண்டார்.

தற்போது ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் இவர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சை டோனி எப்படித் தான் சமாளித்தாரோ என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

அவர், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கீப்பிங் செய்வது மிகவும் கடினம். ஜடேஜா ஒரு சில நேரங்களில் தனது வேகத்தை குறைத்தும், அதிகரித்தும் போடுவார்.

குல்தீப் யாதவ் வலது, இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு வெவ்வேறு விதமாக வீசுவார். ஆனால் அஸ்வின் எப்படி தான் பந்து வீசுவார் என்று கணிக்கவே முடியாது, அது மிகவும் கடினம்.

அவர் ஒவ்வொரு பந்தையும், ஒவ்வொரு விதமாக வீசுவார்.

இதனால் அஸ்வின் பந்து வீச்சை துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்கள் மனதில் என்ன ஏற்படுகிறதோ, அதே நிலைமை தான் கீப்பருக்கும் இருக்கும்.

ஆனால் டோனி இவரை எப்படித் தான் சமாளித்தார் என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்