அசத்தும் சுழற்பந்து வீச்சாளர்கள்..வெற்றியை நோக்கி இலங்கை: போராடும் பாகிஸ்தான்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com
advertisement

துபாயில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

advertisement

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்கள் எடுத்து. 254 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து நான்காம் நாள் ஆட்டத்தை துவக்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், இலங்கை அணி 96 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 317 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு, துவக்க வீரர் சமி அஸ்லாம் 1 ஓட்டம் எடுத்த நிலையில் கேம்பேஜ் பந்து வீச்சில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து அசால் அலி(17), ஹரிஷ் சோகைல்(10), சான் மசூட்(21) மற்றும் பாபர் அசாம்(0) என வெளியேறியதால், பாகிஸ்தான் அணி 52 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

இதனால் எஞ்சியுள்ள விக்கெட்டுகளை இலங்கை அணி, நான்காம் நாளே வீழ்த்தி விடும் என்று எதிர்பார்த்த போது, அசாத் சபிக், சர்பிராஸ் அகமத் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கியது.

சிறப்பாக ஆடி வந்த இருவரும் அரைசதம் கடந்தனர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

அசாத் சபீக் 86 ஓட்டங்களுடனும், அணியின் தலைவர் சர்பிராஸ் அகமது 57 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான பெரேரா, 3 விக்கெட்டுகள் வீழ்த்தி பாகிஸ்தானை ஆட்டம் காண வைத்தார். அதுமட்டுமின்றி இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சை பாகிஸ்தான் அணியினர் சமாளிக்க முடியாமல் திணறி விளையாடி வருகின்றனர்.

advertisement

இன்னும் வெற்றிக்கு 119 ஓட்டங்கள் தேவை கைவசம் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட்டுகளே உள்ளதால், இன்று இலங்கை அணி அந்த 5-விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்