ஷமியின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது: முன்னாள் பிசிசிஐ ஆலோசகர்

Report Print Kabilan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

முகமது ஷமியுடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ திடீரென ரத்து செய்ய முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் சட்ட ஆலோசகர் உஷா நாத் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மீது அவரின் மனைவி ஹசின் ஜஹான், கொலை முயற்சி, பெண்களுடன் தொடர்பு என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொலிசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் ஷமி மற்றும் நான்கு பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக் குறியாகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து முகமது ஷமி, பி.சி.சி.ஐ-யின் கட்டுப்பாட்டில் உள்ள 26 உறுப்பினர்களை கொண்ட, ஆண்டு ஒப்பந்த அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிசிசிஐ-யின் முன்னாள் பிரதான சட்ட ஆலோசகர் உஷா நாத் பந்தோபாத்யாய் கூறுகையில்,

‘இந்திய கிரிக்கெட் வாரியம், முகமது ஹமியின் மனைவியின் புகாரை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அது சட்டவிரோதம் மற்றும் தவறானது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்