கிரிக்கெட்டில் அதிக சதமடித்த இலங்கை வீரர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா முதலிடத்தில் உள்ளார்.

ஜாம்பவான் சங்ககாரா மொத்தம் 38 சதங்களை விளாசியுள்ளார்.

இப்பட்டியலில் மஹேலா ஜெயவர்தனே 34 சதங்களுடன் இரண்டாமிடத்திலும், அரவிந்த டி சில்வா 20 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மார்வன் அட்டப்பட்டு மற்றும் தில்ஷான் 16 சதங்களுடன் நான்காவது இடத்திலும், சனத் ஜெயசூர்யா மற்றும் திலன் 14 சதங்களுடன் ஐந்தாவது இடத்திலும், ஹசன் 11 சதங்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

இப்பட்டியலில் சண்டிமால் 10 சதங்களுடன் ஏழாவது இடத்திலும், மேத்யூஸ் 8 சதங்களுடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்