கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Abdulsalam Yaseem in கல்வி
148Shares
148Shares
lankasrimarket.com

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 09ஆம் திகதி வரை குறித்த கற்கை நெறிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பீடாதிபதி குமுதுனி தேவி சந்திரகுமார் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இயங்கி வரும் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீடத்தின் மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் கற்றல் நடவடிக்கைகளை பகிஷ்கரித்து வந்தனர்.

எனினும் இதனை முடிவுக்கு கொண்டு வர பல்கலைக்கழகம் பல கட்ட பேச்சுவார்தைகளை மேற்கொண்ட போதிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதினால் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீடத்தின் சகல கல்வி ஆண்டு கற்கை நெறிகளும் (YEAR 1.2,3,4, SEMESTER 2) இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி தெரிவித்தார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்