யாழில் பாரிய தனியார் மருத்துவ கல்லூரியை உருவாக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

Report Print Vethu Vethu in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை அடுத்து, நாட்டில் மேலும் பல வைத்திய கல்லூரிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மனிபால் பல்கலைக்கழகத்தின் இணைப்பாக களுத்துறை பிரதேசத்தில் கொழும்பு மற்றும் கண்டியின் பிரதான தரப்பின் தனியார் வைத்தியசாலைகள் இரண்டினை அடிப்படையாக கொண்டு, புதிய தனியார் வைத்திய கல்லூரிகள் உருவாக்கப்படவுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் பாரிய தனியார் வைத்தியசாலை, பல் வைத்தியசாலை, தனியார் மருத்துவ பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவின் மருத்துவ கல்லூரியின் இணைப்பாக இந்த இரண்டு பீடங்களும் உருவாகவுள்ளன. இந்நிலையில் மருத்துவ பீடத்திற்கு ஒரு முறையில் 250 மாணவர்களும், பல் மருத்துவ பீடத்திற்கு 100 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

தமிழ் மக்களிடம் புலம்பெயர்ந்தவர்கள் சேர்த்த பணத்தை நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வட மாகாணத்தில் உள்ள பாரிய அளவிலான தமிழ் மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கி நாட்டின் வைத்திய துறையில் 10 வருடங்களுக்குள் அவர்களின் ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments