வேலை வாய்ப்புகளை அள்ளி தரும் ரோபோடிக்ஸ் துறையின் சிறப்புகள்

Report Print Raju Raju in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் மனிதர்களின் உதவியில்லாமல் ரோபோ எனப்படும் இயந்திரம் மனிதர்கள் செய்யும் வேலைகளை அவர்களை விட விரைவாக செய்கிறது.

ரோபோக்களை பற்றி படிக்க ரோபோடிக்ஸ் என்ற தனித்துறையே உள்ளது.

ரோபோடிக்ஸ் என்பது மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எம்பெட்டெட் சிஸ்டம், கணிப்பொறி அறிவியல் மற்றும் காக்னிடிவ் அறிவியல் போன்ற பல துறைகளில் சம்பந்தப்பட்டுள்ளது.

ரோபோக்களை வடிவமைப்பது, பராமரிப்பது, புதிய பயன்பாடுகளை உருவாக்குவது, ஆய்வுகளில் ஈடுபடுவது ஆகிய விடயங்கள் இந்த துறையில் பாடங்களாக கற்று தரப்படுகின்றன.

இந்த துறையில் இணைய இன்ஜினியரிங் பின்புலன் திறன் நிச்சயம் இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர், ஐ.டி., மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் ஆகியவற்றில் ஒன்றில் பி.டெக்., பி.இ படித்திருப்பது பொருத்தமான தகுதியாகக் கருதப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை பொருத்தவரையில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ரோபோக்களை தயாரிப்பது மற்றும் தேவைக்கேற்ப பணிபுரியும் ரோபோக்களை வடிவமைப்பது ஆகிய பணிகள் அதிகம் உள்ளது.

வரும் காலங்களில் வர்த்தகம், வீட்டு உபயோகம், போக்குவரத்து உள்ளிட்ட மனித வாழ்வின் பல முக்கிய அம்சங்களில் ரோபோகளின் பங்களிப்பு அதிகரித்து விடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments