தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்

Report Print Kabilan in பொழுதுபோக்கு
38Shares
38Shares
lankasrimarket.com

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தனக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண்(46). இவர் தற்போது முழுநேர அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ’ஜனசேனா’ என்ற கட்சியை தொடங்கிய பவன் கல்யாண், பல மேடைகளில் அரசியல் பேசி வருகிறார். இந்நிலையில், பவன் கல்யாண் விசாகப்பட்டினத்தில் நடந்த தனது கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது சில மர்ம நபர்கள், காரில் விபத்தை ஏற்படுத்தி அல்லது குண்டு வைத்து கொலை செய்துவிடுவோம் என கைப்பேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தான் அதற்கெல்லாம் பயப்படுபவன் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்