உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பிரம்மாண்டமாக தயாரான மைதானம்

Report Print Kabilan in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் நடைபெற உள்ள ஃபிபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக, பிரம்மாண்டமான முறையில் சோச்சி கால்பந்து மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் 6 போட்டிகள் சோச்சி மைதானத்தில் நடைபெற உள்ளதால், இந்த மைதானம், நவீன முறையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த மைதானத்தில் ஃபிபா கால்பந்து கட்டமைப்பின் நிர்வாக தலைவர் கொலின் ஸ்மித் தலைமையிலான குழுவினர் மைதானத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், ரசிகர்கள் அமரும் இடம், போட்டிக்களம் குறித்து ஆய்வு நடத்தினர்.

ஆய்வுக்குப் பின்னர், மைதான பணிகள் திருப்தி அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் ஜூன் 16ஆம் திகதி தொடங்க உள்ள இந்த தொடரில், மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட உள்ளன.

Getty Images

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்