பிரித்தானியாவுக்கு லொறியில் தப்பி செல்ல முயன்ற அகதிகள்: நேர்ந்த பிரச்சனை

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு குளிர்சாதன லொறி மூலம் 26 அகதிகள் செல்ல முயன்ற நிலையில் அதிலிருந்த குழந்தைக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.

பிரான்ஸில் தங்கியிருக்கும் அகதிகள் அடிக்கடி லொறி மூலம் பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸின் Dunkirk பகுதியிலிருந்து குளிர்சாதன லொறி மூலம் 26 அகதிகள் பிரித்தானியாவுக்கு செல்ல இருந்தார்கள்.

லொறியின் உள்ளே ஈரானிலிருந்து வந்த பெண்ணும் அவரின் 2 வயது குழந்தையும் இருந்துள்ளது.

குளிர்சாதன லொறி என்பதால் அதன் உள்ளே வெப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து வெப்ப குறைபாட்டால் உள்ளிருந்த குழந்தை திணறியுள்ளது.

இந்நிலையில், அதிகாரிகள் குறித்த லொறியை சோதனை செய்த போது, உள்ளே அகதிகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடல்நலக்குறைப்பாட்டால் அவதியுள்ள குழந்தையை மருத்துவமனையில் சேர்த்ததுடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்