பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிய 270 ஜிகாதிகள்: அரசு அதிர்ச்சி தகவல்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
660Shares
660Shares
lankasrimarket.com

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்காக போராடிவிட்டு 271 ஜிகாதிகள் தாய்நாடான பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சரான Gerard Collomb என்பவர் நேற்று பத்திரிகைக்கு தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 700 பேர் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளனர்.

இவர்களில் சிலர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்கள் பயிற்சியை தொடர்ந்து வரும் நிலையில், இவர்களில் 271 ஜிகாதிகள் அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது பொலிசாரின் விசாரணை வட்டத்தில் உள்ளனர்.

அதே சமயம், இவர்களில் ஆபத்துமிக்க 50 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் தவிர்த்து தீவிரவாதத்திற்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 18,500 பேர் மீது ரகசிய கண்காணிப்பு தொடர்கிறது.

2015-ம் ஆண்டு பாரீஸ் தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

தற்போது 271 ஜிகாதிகள் பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பியுள்ளதை தொடர்ந்து தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்