பலர் கண் முன்னே விதியை மீறிய நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
370Shares
370Shares
lankasrimarket.com

பாரீஸ் கால்வாயில் விதியை மீறி குளிக்க அனுமதி இல்லாத பகுதியில் குதித்த ஒருவர் பலர் கண் முன்னே பிணமாக எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் குளிப்பதற்காக வந்திருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது.

பாரீஸ் கால்வாயில் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக திறந்தவெளி நீச்சல் குளத்தின் அருகே நேற்று மதியம் மூன்று மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

குளித்துக் கொண்டிருந்த தனது 30களிலிருந்த அந்த மனிதன், நீச்சல் குளத்திற்கு வெளிப்புறமாக கால்வாயில் குதித்த பிறகு மீண்டும் மேலே வரவே இல்லை.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக பாதுகாப்புக் குழுவினரை அழைக்க, அவர்கள் தண்ணீருக்குள் குதித்தபோது அங்கு ஏராளமான பாசி இருந்ததால் அவர்களால் சிறிது நேரத்திற்கு எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் ஒரு வழியாக அவரைத் தேடி வெளியே இழுக்கும்போது ஐந்து அல்லது ஆறு நிமிடங்கள் ஆகிவிட்டிருந்தது.

தண்ணீரிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட அந்த மனிதனின் தலையில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.

அவர் குதிக்கும்போது அவரது தலை தண்ணீருக்குள் இருந்த எதன் மீதோ மோதியிருக்க வேண்டும்.

குளிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் அதிர்ந்துபோய் பார்த்துக் கொண்டிருக்க மருத்துவ உதவிக் குழுவினர் அவருக்கு உயிர் மீட்பு சிகிச்சை செய்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

பலர் கண் முன் நடந்த இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நீச்சல் குளம் மூடப்பட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்