மக்களை கிறுக்கு பிடிக்க வைக்கும் "போக்கிமோன் கோ"

Report Print Deepthi Deepthi in கணணி விளையாட்டு
மக்களை கிறுக்கு பிடிக்க வைக்கும்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆப்ஸ்(Apps) ஸ்டோர்களில் கிடைக்கும் ’போக்கிமோன் கோ’(Pokémon GO) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் இன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டது.

இல்லாத கதாபாத்திரங்களை இருப்பதுபோல் மாயமாக சித்தரித்து, கைப்பேசி மூலம் தேட வைப்பதே ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் ஆப்ஸ் ஆகும்.

ஜிபிஎஸ்(GBS) மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் இந்த ரியாலிட்டி கேமை(Reality Game) ஆன் செய்தவுடன் மொபைல் போனின் ஜிபிஎஸ் உடன் இணைந்து விடும்.

நாம் நிஜத்தில் நகர்ந்தால் அந்த கேமில் நம்முடைய கேரக்டரும் நகரும். சில இடைவெளியில் ‘மான்ஸ்டர்கள்’(Manchester) எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாக காண்பிக்கும்.

அந்த இடத்திற்கு நாம் நடந்து சென்றால் அவற்றை பிடிக்க முடியும். இப்படித் தான் இதை விளையாட வேண்டும்.

விளையாடும் அனைவரும் அந்த கற்பனை உலகிற்கு அழைத்து செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த போக்கிமோன் கோ விளையாட்டு.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments