ஜேர்மனியில் உள்ள அகதிகள் முகாமில் ஐந்து பேர் கொண்டர் கும்பல் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் ஹாம்ஸ்பெர்க் பகுதியில் அகதிகள் தங்கும் முகாம் உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் 7 வயது சிறுமி ஒருவரை மர்ம கும்பல் ஒன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இதில் ஐந்து பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஜேர்மனியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பாலிய துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மனிக்கு மில்லியன் கணக்கான மக்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.