ஜேர்மனியில் வைரலாகும் பெண் பொலிசாரின் சல்சா நடனம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் பெண் பொலிஸ் அதிகாரியின் சல்சா நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.

பெர்லினில் 4 நாட்கள் நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வார இறுதி நாட்களை மிக விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.

advertisement

இந்த விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் விழாவில் கலந்துகொண்ட நபர் ஒருவருடன் சல்சா நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறித்த காணொளியானது சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு இதுவரை 1.5 மில்லியன் பேரால் கண்டுகளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி 7000 பேர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

குறித்த நிகழ்வு தொடர்பாக பேசிய அவர், நாங்களும் சாதாரண மக்கள் தானே, பணியில் இருந்தாலும் எங்களுக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்றார்.

பொலிஸ் அதிகாரியுடன் நடனமாடிய அந்த நபர், அவரின் பெயரை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்த நிகழ்வால் அவர் பதவிக்கு எந்த சிக்கலும் வர வாய்ப்பில்லை என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments