தூதரக அதிகாரியின் காரில் மோதி பலியான நபர்: தலைநகரில் பரபரப்பு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

ஜேர்மனி நாட்டில் தூதரக அதிகாரி ஒருவரின் கார் மீது சைக்கிளில் சென்றவர் மோதி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் தலைநகரான பெர்லினில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் சொகுசு கார் ஒன்று சென்றுள்ளது. காரை பின் தொடர்ந்து சைக்கிள் ஒன்றும் பயணித்துள்ளது.

இந்நிலையில், ஓரிடத்தில் கார் நின்றதும் அதிலிருந்த 50 நபர் திடீரென கதவை திறந்துள்ளார். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத சைக்கிளில் சென்ற நபர் கதவு மீது மோதி கீழே விழுந்துள்ளார்.

இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட 55 வயதான நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனில்லாத காரணத்தினால் கடந்த புதன்கிழமை அன்று உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோது, சொகுசு கார் தூதரக அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது எனவும், கதவை திறந்ததும் தூதரக அதிகாரி தான் எனவும் தெரியவந்துள்ளது.

எனினும் அவர் எந்த நாட்டு தூதரக அதிகாரி? அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.

ஜேர்மன் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள தகவலில், தூதரக அதிகாரி சவுதி அரேபியாவை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளது.

எனினும், இசம்பவத்திற்கு தூதரக அதிகாரி மீது வழக்கு பதிவு செய்வதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments